ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு... சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவு! - Minister senthil Balaji judicial custody

செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Aug 12, 2023, 4:28 PM IST

சென்னை: போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி காவலில் எடுத்தனர்.

கடந்த 5 நாட்களில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்றுடன் (ஆகஸ்ட். 12) செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க: சாதி, இன உணர்வை தவிர்ப்பதற்காக நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த வழக்கில் மேலும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதாகவும் அதனால் நீதிமன்ற காவலை நீட்டிக்கும் படி அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். கடந்த 6 நாட்கள் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர் அளித்த வாக்கு மூலத்தை விசாரணை அறிக்கையாக தயாரிக்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பின்னர், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் பதிலில் உள்ள நம்பகத்தன்மையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை - அமலாக்கத்துறை தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.