பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஆகஸ்ட் 11) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பேசினார். அப்போது, 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 17ஆம் தேதி தொடங்கும். ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு மாறும் மாணவர்களின் சேர்க்கையும் அன்றைய தேதியிலே நடைபெறும்.
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை வருகிற 24ஆம் தேதி தொடங்கி நடைபெறும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளன்று விலையில்லா பாடப்புத்தகங்கள் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றி வழங்கப்படும்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி தனியார் பள்ளிகளில் எல்கேஜி, 1ஆம் வகுப்புக்கான சேர்க்கைக்கு இணையதளத்தின் மூலம் பெற்றோர்கள் விண்ணப்பம் செய்திட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு கல்வி இயக்கத்தின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
மேலும், பள்ளிகளைத் திறக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், அனைத்து துறைகளைச் சார்ந்தவர்களிடம் முதலமைச்சர் ஆலோசனை செய்து பள்ளிகளைத் திறப்பது குறித்த முடிவை அறிவிப்பார் என்றார்.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கும் பணி தீவிரம்!