சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜாக்டோ-ஜியோ ஓருக்கிணைப்பாளர் தாஸ், "கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது 5000க்கு மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது அந்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கையை (NEP 2020) முற்றிலும் தவிர்க்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
மேற்குறிப்பிட்ட, கோரிக்கைகளை அரசு ஏற்று வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது அறிவிப்பு வெளியிட வேண்டும்” என்று வேண்டுஜ்கோள் விடுத்தார்.