ETV Bharat / state

பள்ளிகள் திறப்பு எப்போது? - நாளை அமைச்சர் ஆலோசனை - minister sengottaiyan

தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது, பொதுத்தேர்வுகளைத் தள்ளிவைப்பது உள்ளிட்டவைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நாளை முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

minister sengottaiyan  school opening discussion
மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுடன் நாளை அமைச்சர் ஆலோசனை
author img

By

Published : Oct 5, 2020, 2:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்? பொதுத்தேர்வுகளைத் தள்ளி வைக்கலாமா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் துறை அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறையாத நிலையில், பள்ளி எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், அடுத்த மாதம் பத்தாம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளைத் தொடங்கலாமா, பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்கலாமா? உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து துறைச் செயலர், இயக்குநர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

மேலும், இன்று மதியம் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டமும் நடைபெறுகிறது. இதில், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக புதிய கல்விக் கொள்கையின் சாதக பாதக அம்சங்கள் குறித்து அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை நாளை சென்னைக்கு வர அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டால், மாணவர்களுக்கு சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற போதுமான இடவசதிகள், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகளையும் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளிக் கல்வித் துறையின் 2 இணை இயக்குநர்கள் அதிரடி பணியிட மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.