பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, "திமுக ஆட்சி காலத்தில் 58 ஆயிரம் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நிரந்தரம் செய்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் நிரந்தரம் செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய பொன்முடி , போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் ஐந்து ஆயிரம் பேர் மீது 17 (பி) பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது" என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "திமுக ஆட்சி காலத்தில் தேவை இருந்ததால் உடனடியாக நிரந்தரம் செய்யப்பட்டார்கள். ஆனால் தற்போது அது போன்ற ஒரு நிலை எழவில்லை. உடனுக்குடன் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
புள்ளி விவரங்கள் தவறாக வெளியிடப்பட்டுள்ளன. அதனடிப்படையில், பேச வேண்டாம்" என்று தெரிவித்தார். மேலும் ஆசிரியர்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டிவிடுவதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை, டிப்ளமோ படித்தவருக்கு வேலை உண்டு - செங்கோட்டையன்