வள்ளலாரின் அவதார திருநாளை முன்னிட்டு சென்னை ஏழு கிணறு பகுதியில் அவர் வாழ்ந்த இல்லத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வள்ளலாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், ”சென்னை ஏழு கிணறு பகுதியில் வள்ளலார் இந்த இல்லத்தில் 33 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். முதலமைச்சர் அனுமதியோடு வள்ளலாரை வழிபட்டு அன்னதானத்தை தொடங்கி வைத்துள்ளோன்.
வள்ளலார் பெருமைகள், சமத்துவம், பசி என்பதை நாட்டில் இல்லாமல் இருக்க வேண்டும் போன்ற வள்ளலாரின் அரும்பணிகளை பெருமைப்படுத்தும் விதமாக 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தற்கான வரைபடங்கள் கோரி விளம்பரப்படுத்தியுள்ளோம்.
முதலமைச்சர் சுயமாக சிந்தித்து, சுயமாக முடிவெடுப்பதால்தான் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். சுயமாக சிந்திப்பதால்தான் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு முதலமைச்சராக்கியுள்ளனர். முதலமைச்சரின் சிந்தனை சரியில்லை என கூறியவரின் சிந்தனை சரியில்லாததால்தான் அவரது கட்சியிலேயே அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அன்னை தமிழில் வழிபாடு திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அன்னை தமிழில் வழிபாடு என்பதை மற்ற மொழிகளில் வழிபாடு இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். போராடுவதற்கு எந்த காரணமும் இல்லை என்பதால் தமிழ்நாடு அரசின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக பாஜக போராட்டம் நடத்துகின்றது.
ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படியே கோயில்களில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வார இறுதி நாள்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி பாஜக போராட்டம் நடத்துவது தேவையற்றது.
இந்த நிலை ஆண்டு முழுவதும் தொடராது. கரோனாவால் தமிழ்நாட்டுல்லி எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன் அனைஹ்து கோயில்களும் திறக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: 'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'