ETV Bharat / state

'அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்ப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின்' - அமைச்சர் சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு புகழாரம் சூடியுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு
author img

By

Published : Jan 12, 2023, 3:40 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருவிடைமருதூர் கோவி செழியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, 'இன்றைக்கு குடமுழுக்கு தொடர்பான பத்திரிகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க தமிழிலேயே அச்சடிக்கப்படுகிறது என்றால், அதற்கு முழு காரணமும் திமுக ஆட்சி தான்' எனப் பேசினார்.

மேலும் 'பழனி முருகன் கோயிலில் நூற்றுக்கும் அதிகமான ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு வேத மந்திரங்கள் தமிழில் வாசிக்கப்படுகிறது என்றால், அதற்கும் திமுக அரசு தான் காரணம்' எனவும் புகழாரம் சூடியுள்ளார்.

அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் உள்ளிட்ட அனைவரும், நடந்தே சென்று தமிழை வளர்த்த நிலையில், முதலமைச்சர் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்த்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும், தேவாரம் மற்றும் திருவாசகம் ஒலிக்கிறது என்றால் அதற்கு முழுக் காரணமும் திமுக அரசு தான் எனவும் அமைச்சர் சேகர் பாபு பதிலளித்தார்.

இதையும் படிங்க: Ration card new rule : “கைரேகை வேண்டாம், கருவிழி போதும்” - அமைச்சர் சக்கரபாணி அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.