ETV Bharat / state

‘குரங்கு அம்மைக்கு சிறப்பு வார்டு தயார்’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன் - அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மை சிகிச்சைக்காக சிறப்பு வார்டு தயாராக உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மா சுப்பிரமணியன்

author img

By

Published : Jul 16, 2022, 4:20 PM IST

சென்னை : பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கு அம்மை பாதிப்பு பரிசோதனை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 63 நாடுகளில் குரங்கு அம்மை தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் தொற்று கடந்த 2ஆம் தேதி அரபு நாட்டிலிருந்து திருவனந்தபுரம் வந்த குழந்தைக்கு உறுதியானது.

தமிழ்நாடு - கேரள எல்லையில் 13 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரள விமானங்களில் வருவோரும் கண்காணிக்கப்படுகின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் 2 விழுக்காடு பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், குரங்கம்மைக்கு சேர்த்து பரிசோதனை செய்யப்படுகிறது.

பாதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாட்டில் இருந்து வருவோரில் முகம் கையில் கொப்பளம் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது. சென்னைக்கு ஜூலை மாதம் தினம்தோறும் 30-40 விமானம் மூலம் 5-9ஆயிரம் பயணியர் வருகை தந்தனர். இந்த மாதத்தில் சென்னைக்கு 531 விமானம் மூலம் ஒரு லட்சத்து 153 பயணியர் வருகை தந்தனர். அதில் ஆயிரத்து 987 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். 39 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. வீடுகளில் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். குரங்கு அம்மைக்கு சென்னையில் ஒரு ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

செய்தியாளர்களைச் சந்தித்த மா சுப்பிரமணியன்

சென்னையில் குரங்கு அம்மைக்கு ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்ட அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு பாதுகாப்பாகவே இருக்கிறது. இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறி இல்லை. முதலமைச்சர் மிகவும் நன்றாக இருக்கிறார். மருத்துவர்கள் அறிவுறுத்தல்படியே ஓய்வில் இருக்கிறார். முதலமைச்சர் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அறிவிப்பார்கள்.

தற்போதைய கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆவடி நாசருக்கும் அண்மையில் பாதிப்பு ஏற்பட்டது. ஓ. பன்னீர் செல்வத்திற்கு கரோனா இருக்கா என அதிகாரபூர்வமாக எனக்கு தெரியாது. தொற்று தற்போது அரசியல்வாதிகளுக்கு மட்டும் வருவதாக கூற முடியாது. பலருக்கும் வேகமாக பரவுகிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் கரோனா அதிகரித்துள்ளது. பெரியளவில் இல்லை என்றாலும் 100க்கு 50 என்ற அளவில் அதிகரிக்கிறது. கரோனா பாதிப்பில் 40 விழுக்காடு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், குறிப்பிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படும். அந்த சூழல் தற்போது இல்லை " என்றார்.

இதையும் படிங்க: ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற நிலையில் நாளை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.