கரோனா தொற்று பரவலை தடுக்க ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உள்பட்ட பகுதியில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நியமிக்கப்பட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு பணியை மேற்கொள்ள அமைச்சர்கள், சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் திருவொற்றியூர் மண்டலத்தில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது. வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தெருக்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
மேலும், ஊரடங்கை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.
இதையும் படிங்க...ஓபிசி இட ஒதுக்கீடு: மத்திய அரசு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு