சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் இன்று (நவ.30) அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,”ஒவ்வொரு ஆண்டும் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிவர் புயலுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து புதிய வரலாற்றை அரசு படைத்தது. உயிர்சேதம்,பெரியளவில் பொருள் சேதம் ஏதும் ஏற்படாமல், மக்களை காக்கும் ஒரு முன்மாதிரியான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.
இது இயல்பான மழை அளவைவிட, அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 14 விழுக்காடு குறைவு. அதீத மழை பெய்யும் போது வல்லரசு நாடுகளில்கூட தண்ணீர் தேங்கும்”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,”சாலை, குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமான அளவும், இதர 16 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவு மழையும் பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. வலுவான காற்றழுத்த பகுதியை தொடர்ந்து கவனித்து வருகிறோம்”என்றார்.