ETV Bharat / state

’அது ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ - அமைச்சர் ஜெயக்குமார் - minister Rajenthra Bhalaji issue

சென்னை: இஸ்லாமியர் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

minister Rajenthra Bhalaji issue: that is his personal opinion, says minister jayakumar
minister Rajenthra Bhalaji issue: that is his personal opinion, says minister jayakumar
author img

By

Published : Feb 4, 2020, 3:02 PM IST

சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழ்நாடு முழுவதும் இதுவரை 45.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், காலுறைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேலும், ஓராண்டுக்கு மேல் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை உ.பி. அரசால் செயல்படுத்த முடியாத நிலையில், தமிழ்நாட்டில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி செயல்படுத்தப்பட்டுவருகிறது. நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற அரசு போராடும்” என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “இஸ்லாமியர்கள் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து; அது கட்சியின் கருத்து அல்ல. டி.என்.பி.எஸ்.சி.யைக் கண்டித்து உதயநிதி ஸ்டாலின் போராட்டம் நடத்துவது கட்சியில் அவரை முன்னிலைப்படுத்துவதற்குத்தான்” என்றார்.

இதையும் படிங்க: 'ராஜேந்திர பாலாஜியின் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஏன் தொடரக்கூடாது?' - நீதிமன்றம் கேள்வி

Intro:சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்Body:சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிதிவண்டிகளை வழங்கி பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மேடையில் பேச்சு :
இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் உத்தரப்பிரதேச அரசு தோல்வி அடைந்தாலும், தமிழகம் தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் செங்கோட்டையன்.

நிகழ்வில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, முதன்மைக்கல்வி அலுவலர் அனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் இதுவரை 45.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், காலுறைகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஓராண்டுக்கு மேல் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை உ.பி. அரசால் செயல்படுத்த முடியாத நிலையில், தமிழகத்தில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி செயல்படுத்தப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குத் தான் IQ Level அதிகமாக உள்ளதாகக் கூறிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி:

இஸ்லாமியர்கள் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து, அரசின் கருத்து அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இஸ்லாமியர்கள் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், அமைச்சரின் கருத்து அதிமுகவின் கருத்தாக இல்லாத பட்சத்தில் ஆளுநரிடம் எப்படி முறையிடலாம்? என்றும் கூறினார். டி.என்.பி.எஸ்.சி.யைக் கண்டித்து உதயநிதி ஸ்டாலின் போராட்டம் நடத்துவது பற்றி பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சிறைக்கு சென்றவர், சொற்பொழிவாளர், பேச்சாளர் என்று பல பட்டங்களை உதயநிதிக்கு தரலாம் என்றும், உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துவதற்காகவே திமுக டி.என்.பி.எஸ்.சி.யைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
Conclusion:சென்னை ராயபுரம் நார்த்விக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.