ETV Bharat / state

அரசு கல்லூரி இல்லாத தொகுதிக்கு கல்லூரி அமைப்பதில் முன்னுரிமை: அமைச்சர் பொன்முடி - chennai

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எந்த தொகுதியில் அரசு கல்லூரி இல்லையோ அந்த தொகுதிக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அரசு கல்லூரி இல்லாத தொகுதிக்கு முன்னுரிமை: அமைச்சர் பொன்முடி

author img

By

Published : Jan 13, 2023, 7:53 PM IST

சென்னை: இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மு.பெ.கிரியின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.

மு.பெ.கிரியின் கேள்வி: "செங்கம் தொகுதியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி துவக்க அரசு முன் வருமா?

பொன்முடியின் பதில்: "அனைத்து சட்டமன்ற உறுப்பினரும் தங்கள் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 8 தொகுதிகள் இருக்கிறது. 8 அரசு கல்லூரிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள். அங்கு ஏற்கனவே 3 கல்லூரிகள் இருக்கின்றன. செங்கத்தில் மட்டும் 4 சுயநிதி கல்லூரிகள் இருக்கின்றன.

மேலும், மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தான் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்படும். எந்த தொகுதியில் அரசு கல்லூரி இல்லையோ அந்த தொகுதியில் முன்னுரிமை அடிப்படையில் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும்" என்றார்.

மு.பெ.கிரியின் கேள்வி: "திருவண்ணாமலை மாவட்டம், தான் கல்வியில் பின் தங்கிய மாவட்டம், செங்கம் சட்டமன்றத் தொகுதியில் பிற தொகுதியைப் போல் பார்க்காமல் செங்கம் தொகுதிக்கு கல்லூரி அறிவிக்க வேண்டும்" என்றார்.

பொன்முடியின் பதில்: "முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, மாணவர்கள் எண்ணிக்கையை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும். சுயநிதி கல்லூரிகளை விட அரசு கல்லூரிகளை மாணவர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள் என்பது உண்மை. மேலும், செங்கம் தொகுதிக்கு வருங்காலத்தில் அரசின் நிதிநிலை அறிக்கை ஏற்ப இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: Video: பனி உறைந்து ஓடுவதைப் போல அணை நீருடன் செல்லும் ரசாயன நுரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.