சென்னை: தேர்வுகளை நேரடித் தேர்வுகளாக நடத்துவது குறித்து, தலைமைச் செயலகத்தில், மாணவர் அமைப்புகளுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் இரண்டு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் எனவும், பொங்கல் விடுமுறைக்குப் பின் நேரடித் தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, 'கல்லூரித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது.
11 மாணவர்கள் அமைப்புகளுடன் நடந்திய பேச்சுவார்த்தையில், மாணவர்களுக்கு 2 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்புகள், மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பின் நேரடி முறையில் தேர்வு(Direct Exams) நடைபெறும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'போராட்டத்தில் உயிரிழந்த உழவருக்கு ஒன்றிய அரசு இழப்பீடு தர வேண்டும்'