சென்னை: தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட தங்க நகைக் கடன் குறித்த ஆய்வு 95 விழுக்காடு முடிவடைந்துள்ளது.
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் 2500 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயிர்க்கடன்
கூட்டுறவு சங்கங்களில் 7 லட்சம் புதிய விவசாயிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு இதுவரை 700 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ள கடன்களுக்கான 12 விழுக்காடு வட்டி 7 விழுக்காடாக குறைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
மலிவு விலை மருந்தகங்கள்
தமிழ்நாடு முழுவதும் 75 கூட்டுறவு மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன" என்றார்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபா ஜாமின் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி!