சென்னையை அடுத்த ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், மிட்டனமல்லி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் அரசு சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர், மருத்துவர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஆர்.எஸ். பாரதி போன்ற திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அவர்களது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்காமல் அந்த கருத்தை நியாயப்படுத்த நினைப்பது ஒரு நாகரீக அரசியலுக்கு உகந்தது இல்லை. அதனை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கண்டிக்காதது ஏற்றுக்கொள்ள முடியாது. இது சம்பந்தமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதிமுக அரசுக்கு எதிராக திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிப்பது, ஊரடங்கு காலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று கூட தெரியாமல் ஒரு கட்சித் தலைவர் உணர்ச்சிகரமாக பேசுவதை திருத்திக்கொள்ள வேண்டும். அதிமுக எந்த வித சாதிய பாகுபாட்டுக்கு இடம் கொடுக்காது" என்றார்.
இதையும் படிங்க... 'தமிழ்நாடு முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்'