சென்னை: ”உலக சிக்கன நாள்” இன்று உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைவதுடன் மனமார்ந்த வாழ்த்துகளையும் மக்களுக்கு தெரிவிப்பதாக தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டார்.
இந்தியாவில் 1985ம் ஆண்டு முதல் அக்டோபர் 30ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவை மகிழ்ச்சி ஆளிப்பதாகவும், மேலும் உலக பொதுமறையான திருக்குறளில்
"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்"- குறள் 479.
என்பதன் அர்த்தம் - ’ஒருவன் தனது செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாவிடில் அவன் வாழ்க்கை, செல்வம் இருப்பது போலத் தோன்றினாலும் செல்வம் இழந்து வாழ்க்கைக் கெடும்’ என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
அதுபோலவே தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்குத் தேவைப்படும் அவசரத் தேவைகள், பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவினங்களை கடன் வாங்காமல் மேற்கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில், ஒரு பகுதியை பாதுகாப்பான வழியில் சேமிப்பது தான் சிறந்தது. என்றும் மக்கள் தங்களது சேமிப்புத் தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தல் அவசியம் அப்போது அவை தேவைபடும்போது நம் கையுக்கு வரும் என்றும் கூறினார்.
அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவையாக இருப்பதால் மக்கள் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து உயர்ந்திட வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேமிப்பே ஒருவரது வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது - மு.க. ஸ்டாலின்