தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜனை தலைமைச் செயலகத்தில் பிரான்ஸ் நாட்டின் சென்டர் வால் டி லார் மாநிலத்தின் கலை பண்பாட்டு அமைச்சர் ஆலிவர் பிர்ஸாட், மேரி சென்னி, அனைஸ் ராம்பாட், லிசா பொன்னெட், மிலானா துருதாவுத் ஆகியோர் சந்தித்தனர்.
தமிழ்நாடு, பிரான்ஸ் கலை பண்பாடு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்தும், தென்னக பண்பாட்டு மையத்துடன் இணைந்து இசை, நாடகம் ஆகியவற்றை வெளிநாடுகளில் நடத்துவது குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடினர்.
மேலும் பிரான்ஸ், தமிழ் இசைக்கலைஞர்களுடன் இணைந்து தமிழ் இசையில் கூட்டு இசைப்படைப்பினை தயாரித்து அதனை தமிழ்நாட்டிலும், பிரான்சிலும் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அசோக் டோங்ரே, கலை பண்பாட்டுத் துறையின் இயக்குநர் கலையரசி, கலை பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் சூரிய பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதிரோலி - வலுக்கும் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கான கட்டுப்பாடுகள்!