ETV Bharat / state

அவசியமுள்ள இடங்களில் வீடுகள் கட்டப்படும் - அமைச்சர் முத்துசாமி

மாவட்ட வாரியாக ஆய்வு செய்து அவசியமுள்ள இடங்களில் வீடுகள் கட்டப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி
author img

By

Published : Mar 22, 2022, 1:55 PM IST

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டு மோசமான நிலையில் இருக்கும் கட்டடங்களுக்கு, புதிய கட்டடங்கள் கட்டித்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் முத்துசாமி உறுதியளித்தார்.

சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தின்போது, சேந்தமங்கலம் தொகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு முன்வருமா எனவும், மக்கள் தொடர்ந்து வாடகை கட்ட முடியாமல் சிரமத்தில் உள்ளதால் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, சேந்தமங்கலம் தொகுதியில் ஏற்கனவே 60 வீடுகள் அடுக்குமாடி வாடகை வீடுகளாக இருப்பதாகவும், 51 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து, அவசியம் இருப்பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேபோல், பல இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் மிக மோசமாக இருப்பதாகவும், இதற்காக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் அதை சரி செய்ய உத்தரவிட்டுள்ளதால், புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: மாநிலங்களவையில் ஒலித்த தி காஷ்மீர் ஃபைல்ஸ்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.