ETV Bharat / state

சென்னை மெரினா கடற்கரை அழகுப்படுத்தப்படும் - அமைச்சர் மெய்யநாதன் - ஈடிவி பாரத்

சென்னை மெரினா கடற்கரை 20 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்படும் எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை
author img

By

Published : Sep 3, 2021, 4:28 PM IST

சென்னை: 2021-2022ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது.

அப்போது சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறையின் புதிய அறிவிப்புகள் குறித்து வீ. மெய்யநாதன் பேசுகையில், "புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு செட்டிக்குளத்தின் கரையை மேம்படுத்தி பூங்கா அமைக்க ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் பசுமைப் பூங்கா அமைத்து சாலை வசதியை மேம்படுத்த இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

புதுக்கோட்டை நகராட்சி புதுக்குளம் ஏரியைப் புனரமைத்து மேம்படுத்த ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும். மாபெரும் மரம் நடும் திட்டத்திற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மெரினா கடற்கரை 20 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை 32 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பசுமை பூங்கா இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

முதலமைச்சருடன் அமைச்சர் மெய்யநாதன்
முதலமைச்சருடன் அமைச்சர் மெய்யநாதன்

சென்னையில் பாய்மர படகோட்டுதல் அகாடமி ஏழு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இது தமிழ்நாட்டைச் சேர்ந்த படகோட்டும் வீரர்களுக்கு உந்துச் சக்தியாக அமையும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிறப்பு, இறப்பு சான்றிதழ் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.