ETV Bharat / state

தமிழ்நாடு சுகாதாரத்துறை சென்னை ஐஐடியுடன் இணைந்து ஆராய்ச்சி - அமைச்சர் மா.சு - சென்னை ஐஐடியுடன் இணைந்து ஆராய்ச்சி

சென்னை ஐஐடியுடன் இணைந்து தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தில் மருத்துவத்துறையை மேம்படுத்துவது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும், வருகிற 2030ஆம் ஆண்டிற்குள் மருத்துவத்துறையில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வர உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 20, 2023, 11:03 PM IST

சென்னை: தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மற்றும் சென்னை ஐஐடி (Madras IIT) இணைந்து மருத்துவத்துறையை மேம்படுத்தவும், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்ப்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் மாவட்ட அளவிலான சுகாதார உயர் அலுவலர்களுக்கான கருத்தரங்கைத் தொடங்கி வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவை குறித்த கையேட்டினை வெளியிட்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், 'ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்கான அனைவருக்கும் அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு அடைய தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மூலம் பல்வேறு செயல்பாடுகள் உலக வங்கியின் உதவியுடன் 'தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் 2019' தொடங்கப்பட்டது.

உலக வங்கியில் ரூ.1,219.08: கோடி இந்தத் திட்டம் ரூ.2,854.74 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. உலக வங்கி பங்களிப்பு ரூ.1998.32 கோடி மற்றும் தமிழ்நாடு அரசு பங்களிப்பு ரூ.856.42 கோடி ஆகும். உலக வங்கி இதுவரை ரூ.1,219.08 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations Organization) பூர்த்தி செய்யப்படாத இலக்குகளான தொற்றா நோய்களை கட்டுப்படுத்துதல், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளை மேம்படுத்துதல், மனநல சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை வருகிற 2030ஆம் ஆண்டிற்குள் அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ரூ.615.68 கோடி: தொற்றா நோய்கள் மற்றும் அவற்றின் ஆபத்து காரணிகளின் தற்போதைய விகிதம், மேலும் அதனை தடுப்பதற்கான உத்திகள் குறித்து ஆய்வு செய்தல் மூலமாக தொற்றா நோய்களின் ஆபத்து காரணிகள் மற்றும் பாதிப்பின் விகிதம், குறிப்பாக கட்டுப்படுத்தப்படாத நீரழிவு நோய் (Diabetes) மற்றும் உயர் ரத்த அழுத்தம் (High blood pressure) காரணமாக உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதை கண்டறிந்து தடுக்கும்பொருட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2021' ஆகஸ்ட் 5ஆம் தேதி சாமனப்பள்ளியில் தொடங்கப்பட்டது. இதன் மொத்த நிதி பங்களிப்பு ரூ.615.68 கோடி ஆகும்.

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டின், மாநில குற்றப்பிரிவு பதிவேட்டின்படி, 55,713 சாலை விபத்துகள் எற்பட்டு, 17,544 பேர் படுகாயமும், 14,912 பேர் இறந்துள்ளார்கள். இதனைத் தடுக்கும் பொருட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் 'இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம்', மேல்மருவத்தூரில் 2021 டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கப்பட்டது.

அவசர சிகிச்சைத்துறை ரூ.10.97 கோடி: இந்தத் திட்டத்தின் மூலம் 31.12.2022 வரை 1,35,580 சாலை விபத்துகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைகளை மேம்படுத்த 25 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைத்துறை ரூ.10.97 கோடி செலவில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முதுகலை மேற்படிப்பு (M.D Emergency Medicine) 22 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 2022-23 கல்வியாண்டு 85 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு 57,877 பேருக்கு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது, அதே போல 2022 ஆம் ஆண்டு 58,679 பேர் சாலை விபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதன் மூலம் 2019ஆம் ஆண்டிற்கும் 2022 ஆம் ஆண்டிற்கும் சாலை விபத்து ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4% அதிகரித்துள்ளது. அதேபோல, 2019ஆம் ஆண்டு சாலை விபத்தால் 16,736 உயிரிழந்துள்ளனர். அதுவே, 2022ஆம் ஆண்டு 16, 232 உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தால் 504 (3%) உயிரிழப்புகள் கடந்த 2019ஆம் ஆண்டை விட 2022ஆம் அண்டு குறைந்துள்ளது.

சென்னை ஐஐடியுடன் இணைந்து ஆராய்ச்சி: தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் மற்றும் சென்னை ஐஐடி (Madras IIT) இணைந்து செயல்பாட்டு ஆராய்ச்சி என்ற முன்னோடியான ஆராய்ச்சி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக 108 அவசர ஊர்தி சேவைகள், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு சேவைகள், உயிரியல் மருத்துவ கழிவுகள் மேலாண்மை, நோயாளிகளின் பாதுகாப்பு, அரசு மருத்துவமனைகளில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளின் பயன்பாடு, பெண்களை பாதிக்கும் புற்று நோய்களை கண்டறிவதில் உள்ள காலதாமதம் முதலியவை ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

சுகாதார சேவைகளை மேம்படுத்தும் கொள்கை முடிவுகளை எடுக்க இத்தகைய ஆய்வின் முடிவுகள் உறுதுணையாக இருக்கும். மேலும், அரசு மருத்துவமனைகளில் உயிரியல் மருத்துவ கழிவுகள் மேலாண்மை, ஆற்றல் திறன் தணிக்கை, திரவ கழிவுகளின் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் சுற்றுச்சூழல் நெறிமுறைகள் குறித்த கையேடு இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டுள்ளது' எனப் பேசினார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடி உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் 'BharOS' ஆப்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.