சென்னை வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 140 ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் 1,000 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் 1,330 இருக்கிறது. அவற்றில் 450 வாகனங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அவற்றிற்கு தினமும் 50 லிட்டர் எரிபொருளை ரிலையன்ஸ் நிறுவனம் 2 மாதம் இலவசமாகத் தருகிறது.
80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழ்நாட்டிற்கு வருகிறது. ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவத்தையும் அளித்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், வரி வரும் வழிகள் அல்ல - கமல் ஆவேசம்!