சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வருவாய்துறை , தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக கேள்வி நேரத்தின் போது அரக்கோணம் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சு. ரவி, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்திதர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகரங்கள், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: வருவாய் துறை சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறலாம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்