தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, இன்று (ஆக. 20) தனது 61ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதையடுத்து அவர், இன்று காலை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, அவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.