சென்னை ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து ஆகிய மூன்று மதத்தினருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சர் கே.பாண்டியராஜன் பயனாளிகளுக்கு அத்தியாவசியத் தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற நகரங்களை விட தமிழ்நாட்டில் உயிரிழப்பு விகிதம் குறைவு. அரசிற்கு எதையும் மறைக்கும் எண்ணம் இல்லை. 6 அமைச்சர்களும் உயிரை பணையம் வைத்து சென்னையில் கரோனா தடுப்புப் பணிகளில் போராடி வருகிறோம்.
எந்தத் தகவலை எப்படி வெளியிட வேண்டும் என்பது அரசின் உரிமை. தற்போதுள்ள நிலையில் களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் செயலை எதிர்க்கட்சிகள் செய்யவேண்டும் அல்லது அமைதியாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர், உச்சநீதிமன்றம் தேசிய அளவிலான கண்ணோட்டதிலும், சென்னை உயர் நீதிமன்றம் மாநில கண்ணோட்டத்திலும் பார்க்கப்படும். சரியான யுக்தியைப் பயன்படுத்தி சமூக நீதியை தமிழ்நாடு அரசு பாதுகாக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: சுகாதாரத் துறையில் மாற்றம்: மீண்டும் காலடி எடுத்துவைத்த ஜெ. ராதாகிருஷ்ணன்!