இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், ஹெலன் நகர், ராஜாக்கமங்கலம், கொட்டில்பாடு ஆகிய கடலோர கிராமங்களில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு, இந்தக் கடற்கரை பகுதிகளில் மீன்களை இறக்க இயலாத நிலை உள்ளது.
இந்தக் கடல் அரிப்பைத் தடுக்க நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைத்து தர வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் 2020-21ஆம் நிதியாண்டில் விதி எண்: 110இன் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், ஹெலன் நகர் கிராமத்தில் ரூ.14.48 கோடி செலவிலும், ராஜாக்கமங்கலம் கிராமத்தில் ரூ.14.33 கோடி செலவிலும், கொட்டில்பாடு கிராமத்தில் ரூ.9.72 கோடி செலவிலும் நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
தற்போது , தமிழ்நாடு அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் நிலையிலுள்ளன. இந்த மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படுவதால் ஹெலன் நகர், ராஜாக்கமங்கலம், கொட்டில்பாடு ஆகிய கடலோர மீனவ கிராமங்கள் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.