சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு அம்மாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் என அதிமுகவை கிண்டல் செய்யும் விதமாக பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஆடிக் காற்றும் அடிக்காது, அம்மியும் பறக்காது, அம்மாவின் ஆட்சி எப்போதும் அகலாது என்றார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘இப்படி நீங்கள் பேசுவீர்கள் என்று தான் அம்மிக்கு பதிலாக ஏற்கனவே மிக்ஸி கொடுத்துவிட்டார்கள். பழைய பழமொழி இப்போது பொருந்தாது. எப்போதும் மம்மி ஆட்சி தான்’ என்றவுடன் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.