சென்னை, ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் மாதா கோயில் பகுதியில் ரிக்ஷா சைக்கிள் மூலம் மீனவ மக்களிடம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இருக்க வேண்டியதில்லை, வருமானவரித் துறை சோதனை குறித்து திமுக ஏன் பயப்பட வேண்டும்.
திமுக தனது கொள்கை லட்சியத்தைவிட பணத்தைத்தான் நம்பியுள்ளது. பணத்தைக் கொடுத்து மக்களை எப்படியாவது விலைக்கு வாங்கிவிடலாம் என நினைத்து கோடி கோடியாக வைத்துள்ளார்கள். வருமானவரித் துறை சோதனைக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமில்லாத சோடாபாட்டில், செயின் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது திமுகதான்.
திமுக ஆட்சிக் காலத்தில் ராயபுரம் தொகுதிக்கு ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று காண்பியுங்கள்.
ராயபுரம் தொகுதியில் 50 ஆயிரம் குடும்பங்களில் 40 ஆயிரம் குடும்பங்கள் என் சொந்தக்கார குடும்பம், அவர்கள் இரட்டை இலைக்குத்தான் வாக்களிப்பார்கள்" என்றார்.
இதையும் படிங்க: திருச்சிக்கு மோனோ ரயில்; மலைக்கோட்டைக்கு கேபிள் கார்!