சென்னையில் அதிகம் கரோனா பாதிப்புக்கு உள்ளான ராயபுரம் மண்டலத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீர் மற்றும் ஹோமியோபதி மாத்திரைகள் போன்றவற்றை ஆட்டோவின் மூலம் சென்று வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை கரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் கபசுரக் குடிநீர் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் அமைச்சர் ஜெயக்குமார் கல்லூரி மைதானத்தை சுற்றி வலம் வந்தார். ஆட்டோவில் ஜெயக்குமார் மின்னல் வேகத்தில் ஓட்டி சென்றதை பார்த்த அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: மீனவர்கள் ஜூன் 1 முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்