ETV Bharat / state

'கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு' - அமைச்சர் ஜெயகுமார் - கருத்து திணிப்பு

சென்னை: பண்பாட்டு கலை இயக்கம் சார்பாக வெளியிட்ட கருத்து கணிப்பு திமுகவின் சதியாகவே பார்க்கப்படுகிறது என்றும், இது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என்றும் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் ஜெயகுமார்
author img

By

Published : Apr 5, 2019, 11:38 PM IST

சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பண்பாட்டு கலை இயக்கம் சார்பாக வெளியிட்ட கருத்து கணிப்பு திமுகவின் சதியாகவே பார்க்கப்படுகிறது என்றும், இது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என்றும், இதே மாதிரி தான் 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த அமைப்பு திமுக வெற்றி பெறும் என்று கூறியது. ஆனால் அதற்கு மாறாக அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே இது கருத்து திணிப்பு தான்.

அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் பொழுது விடிந்தால் அதிமுக மீது குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். திமுகவினர் தொகுதிக்கு ரூ.200 கோடி கொடுத்து வெற்றி பெற விரும்புகிறார்கள். இதை தேர்தல் ஆணையம் தடுப்பதால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Intro:சென்னை புளியந்தோப்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்

Body:சென்னையில் இன்று பண்பாடு கலை இயக்கம் சார்பாக வெளியிட்ட கருத்து கணிப்பு திமுகவின் சதியாகவே பார்க்கப்படுகிறது இது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என்றும் இதே மாதிரி தான் 2014 தேர்தலிலும் இந்த அமைப்பு திமுக வெற்றி பெறும் என்று கூறியது ஆனால் மாறாக அதிமுக 37 இடங்கள் வெற்றி பெற்றது எனவே இது கருத்து திணிப்பு தான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

திமுக தலைவர் ஸ்டாலின் பொழுது விடிந்தால் அதிமுக மீது குறை சொல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதிமுகவின் சாதனைகள் மக்களின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது அதிமுகவின் அலை வீசுகிறது ஆனால் அவர்கள் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் நாகரீகம் இல்லாத அரசியல் செய்கின்றனர் தனிநபர் விமர்சனம் போன்ற நாகரீக அரசியலில் ஈடுபடுகின்றனர்.

இன்றைக்கு கூட திமுக மீது தேர்தல் ஆணையத்திடம் பெட்டிஷன் கொடுத்துள்ளோம் சமூக வலைத்தளங்களில் அதிமுக மீது தரக்குறைவான மீம்ஸ் மற்றும் விமர்சனங்கள் செய்கின்றனர் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம்.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயகுமார் தேர்தல் ஆணையம் தன் கடமையை தான் செய்கிறது தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவது இவர்களுக்குப் பிடிக்கவில்லை கசக்கிறது அதனால்தான் தேர்தல் ஆணையத்தின் மீது பழி சுமத்துகிறார்கள் திமுகவின் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் இவர்கள் தேர்தல் ஆணையத்தை குறை கூறுகின்றனர்

இவர்கள் தொகுதிக்கு 200 கோடிகள் கொடுத்து வெற்றி பெற விரும்புகிறார்கள் இதை தேர்தல் ஆணையம் நடக்கவிடாமல் நேர்மையாக நடந்து கொள்கிறது இதனால்தான் அவர்களுக்கு பிடிக்கவில்லை தேர்தல் ஆணையத்தின் மீது பழி சுமத்துகிறார்கள்

மேலும் அவர் பேசுகையில் கடந்த கால பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் தனி நபர் விமர்சனம் அதிகமாகிவிட்டது இது ஒரு ஆரோக்கியமான போக்கு அல்ல இந்தப் போக்கு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் இது சரியான ஜனநாயக முறை அல்ல தனிநபர் விமர்சனம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Conclusion:மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.