காமராஜர் சாலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிக்காகப் பல்வேறு வகையில் உழைத்த பி. ஹெச். பாண்டியனின் மறைவு மாபெரும் இழப்பு. சட்டப்பேரவைத் தலைவராக இருந்தபோது சட்டப்பேரவையின் மாண்புகளைக் காப்பாற்றியவர் அவர்.
அதிமுக வளர்பிறை, திமுக தேய்பிறை என்பதைத்தான் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உணர்த்தியுள்ளார்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்கள். மகத்தான வெற்றி என்ற பிரம்மையை திமுக ஏற்படுத்துகிறது. ஆனால் நிலைமை அதலபாதாளத்தில்தான் சென்றுகொண்டிருக்கிறது”.
இதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோற்கும் எனத் தெரிந்துதான் தன் மகளையும் மகனையும் வேட்பாளராக நிறுத்தினேன் என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறியிருந்த கருத்து குறித்து பேசிய ஜெயக்குமார், "கட்சியிலிருந்துகொண்டு சொந்த கட்சியையேஅன்வர் ராஜா விமர்சனம் செய்யக்கூடாது. இது என்னுடைய கருத்து. என்ன செய்ய வேண்டுமென்பதை தலைமை முடிவு செய்யும்" என்று பேசினார்.
இதையும் படிங்க: ஊள்ளாட்சித் தேர்தல் - அதிமுகவிற்கு பின்னடைவு இல்லை: அன்வர் ராஜா..!