ETV Bharat / state

எம்.ஜி.ஆரின் தலைவர் யார்? - TN Assembly

சென்னை: எம்.ஜி.ஆரின் தலைவர் கருணாநிதியா இல்லையா? என்பது குறித்து சட்டப்பேரவையில் அதிமுக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இடையே விவாதம் நடைபெற்றது.

tn
author img

By

Published : Jul 16, 2019, 6:45 PM IST

சட்டப்பேரவையில், சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சரவணன், ‛உங்கள் தலைவருக்கும் தலைவர், எங்கள் தலைவர் கருணாநிதி என்றும், எனவே உங்களுக்கும் எங்கள் தலைவர்தான் தலைவர் என்றும் தெரிவித்தார்.

அவர் கருத்து தெரிவித்து நீண்ட நேரம் கழித்து, அமைச்சர் தங்கமணி, எங்கள் தலைவருக்கும் தலைவர் கருணாநிதி அல்ல . எம்ஜிஆர்., தன்னிகரற்ற கட்சியின் பெருந்தலைவர். எம்ஜிஆர் சுட்டிக்காட்டியதால் தான், கருணாநிதி, முதலமைச்சர் பதவிக்கு வந்தார்; கட்சி பொறுப்பை ஏற்றார் எனத் தெரிவித்தார்.

உடனே, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ.வேலு குறுக்கிட்டு, கட்சியில் உங்களது தலைவர் பொருளாளராக இருந்தார்; எங்கள் தலைவர், தலைவராக இருந்தார் என விளக்கம் கொடுத்தார்.

மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, 1971 தேர்தலில், இனிமேல் கருணாநிதி மீது ஊழல் குற்றச்சாட்டு வராமல் பார்த்துக்கொள்கிறேன் என எம்ஜிஆர்., கூறியதால்தான், தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார் என்றார்.

அப்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறுக்கிட்டு, எங்கள் தலைவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தபின், அவர் உயிருடன் இருந்தவரை, உங்கள் தலைவரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றார். அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவராக, உங்களது தலைவர் பெயரை முன்மொழிந்ததே எம்.ஜி.ஆர்., தான் எனவும், அதுதான் வரலாறு என்றும் கூறினார்.

தொடர்ந்து, அமைச்சர்களும், திமுக உறுப்பினர்களும் குரல் கொடுக்க, சபாநயகர் தலையிட்டு, இத்துடன் விவாதம் போதும்; அமருங்கள் என விவாதத்தை முடித்து வைத்தார்.

Intro:எம்.ஜி.ஆரின்., தலைவர் யார்?
சட்டப்பேரவையில் காரசார விவாதம்Body:

சென்னை,

எம்.ஜி.ஆரின் தலைவர் கருணாநிதியா? இல்லையா? என்பது குறித்து, சட்டப்பேரவையில் சுவாரஸ்யமான விவாதம் நடந்தது
சட்டப்பேரவையில், சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சரவணன், ‛உங்கள் தலைவருக்கும் தலைவர், எங்கள் தலைவர் கருணாநிதி என்றும், எனவே உங்களுக்கும் எங்கள் தலைவர் தான் தலைவர் என்றும் தெரிவித்தார்.
இவர் கருத்து தெரிவித்து நீண்ட நேரம் கழித்தபின், அமைச்சர் தங்கமணி எழுந்து, எங்கள் தலைவருக்கும் தலைவர் கருணாநிதி அல்ல . எம்ஜிஆர்., தன்னிரகற்ற கட்சியின் பெருந்தலைவர் . எம்ஜிஆர் சுட்டிக்காட்டியதால் தான், கருணாநிதி, முதலமைச்சர் பதவிக்கு வந்தார்; கட்சி பொறுப்பை ஏற்றார் என தெரிவித்தார்.

உடனே, திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு குறுக்கிட்டு, கட்சியில், உங்களது தலைவர் பொருளாளராக இருந்தார்; எங்கள் தலைவர், தலைவராக இருந்தார் என விளக்கம் கொடுத்தார்.
மீண்டும் குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, 1971 தேர்தலில், இனிமேல் கருணாநிதி மீது ஊழல் குற்றச்சாட்டு வராமல் பார்த்துக்கொள்கிறேன் என, எம்ஜிஆர்., கூறியதால் தான், தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆனார் என்றார்.

அப்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறுக்கிட்டு, எங்கள் தலைவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தபின், அவர் உயிருடன் இருந்தவரை, உங்கள் தலைவரால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்றார்.
அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து, சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவராக, உங்களது தலைவர் பெயரை முன்மொழிந்ததே எம்.ஜி.ஆர்., தான் எனவும், அதுதான் வரலாறு என்றும் கூறினார்.

தொடர்ந்து, அமைச்சர்களும், திமுக உறுப்பினர்களும் குரல் கொடுக்க, சபாநயகர் தலையிட்டு, இத்துடன் விவாதம் போதும்; அமருங்கள் என, விவாதத்தை முடித்து வைத்தார்.
- Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.