சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலின் போது அதிகம் பாதித்த பகுதிகள் என்பதால் மக்களைப் பாதுகாக்க சதுப்புநில காடுகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன், கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை ஓரங்களில் இயற்கை பேரிடர் பாதிப்புகளைத் தடுக்க சவுக்கு மரங்களைக் கொண்டு சதுப்பு நிலக்காடுகள் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்றும், இந்த காடுகள் வேகமான காற்று, கடல் மண் அரிப்பைத் தடுப்பதோடு, நிலத்தடி நீரை மேம்படுத்தி வேளாண் நிலத்தை செறிவுபடுத்தும் என்றும், எரிபொருள் ஆகியவற்றை கொடுத்து வருவாயைப் பெருக்கும் என்று கூறினார்.