ETV Bharat / state

இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றிபெறும் - திண்டுக்கல் சீனிவாசன் - நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக உண்மையான வெற்றியை பெறும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

dindigul srinivasan
author img

By

Published : Sep 24, 2019, 11:38 PM IST

Updated : Sep 25, 2019, 7:13 AM IST

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் வனத் துறை அலுவலர்கள் மற்றும் வன பாதுகாப்பு இயக்குநர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்நாடு அரசின் சரியான நடவடிக்கையால் வனம் மற்றும் உயிரியல் துறை சிறந்து விளங்குகிறது.

தாங்கள் அமெரிக்கா சென்று வன மற்றும் உயிரியல் துறை சம்பந்த பிரிவுகளை உயர்த்துவதற்கான பல முயற்சிகளை செய்துவந்துள்ளோம் என்றும் அதனை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றிபெறும். அந்த வெற்றி உண்மையான வெற்றியாக இருக்கும் என்றார்.

Intro:சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் விடுதியில் காடு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நடைபெற்றதுBody:சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் விடுதியில் வன மற்றும் உயிரியல் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது
இந்த நிகழ்வில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன பாதுகாப்பு இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில் தமிழகத்தில் வனம் மற்றும் உயிரியல் துறை சிறந்து விளங்குவதாகவும் தமிழக அரசின் சரியான ஒத்துழைப்பு உடன் சரியான முறையில் இந்த துறை இயங்கி நடைபெற்று வருவதாகவும் கூறினார்
மேலும் தாங்கள் அமெரிக்கா சென்று பல வன மற்றும் உயிரியல் துறை சம்பந்த பிரிவுகளை உயர்த்துவதற்கான பல முயற்சிகளை செய்து வந்துள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் நடைமுறைபடுத்த உள்ளதாகவும் கூறினார்

மேலும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வன உயிரியல் சிறப்பு பிரிவை கொண்டு அவற்றை உயர்த்தும் பணியில் தற்போது தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் கூறினார்
மேலும் விக்ரவாண்டி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு அதிமுகதான் இரண்டு தொகுதிகளிலும் உண்மையாக வெற்றிபெறும் என்றும் அதற்கான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் தங்கள் கட்சி எடுத்து வருவதாகவும் கூறினார்
நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று முடிவடைந்தது
Conclusion:
Last Updated : Sep 25, 2019, 7:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.