இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளவை பின்வருமாறு:
- திருச்சி, செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு 11 கோடியே 71 லட்சம் ரூபாய் ஒதுக்கிட
- வேலூர், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, விழுப்புரம், ராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிகளில் முதுகலை சட்டப்படிப்பு (எம்.எல்.எம்.) தொடங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
- அரசு சட்டக்கல்லூரி மாணவர்களிடையே மாதிரி நீதிமன்றப் போட்டிகளை நடத்த 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
- திருச்சியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்ட வரலாற்று மாநாடு நடத்த 10.65 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு. இப்பல்கலைக்கழகத்திலுள்ள சட்ட வரலாற்று அருங்காட்சியகத்தினை விரிவாக்கம் செய்ய 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு. புதிய சட்ட மையங்கள் நிறுவ 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
- செங்கல்பட்டு மாவட்ட சிறையில் கூடுதலாக 100 சிறைவாசிகள் அடைக்கும் வகையில் கூடுதல் தொகுதி கட்டுதல் மற்றும் பூந்தமல்லி தனிக் கிளைச் சிறையில் சுகாதார வசதிகளை மேம்படுத்த 150 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
- அனைத்து மத்தியச் சிறைகளுக்கும் நான் லீனியர் ஜங்சன் டிடெக்டர் கொள்முதல் செய்த 136.80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
- மதுரை மற்றும் பாளையாங்கோட்டை மத்தியச் சிறைகளில் சிறை அலுவலர்களுக்கான புதிய குடியிருப்புகள் கட்டுதல் 120 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
- 50 உடல் அணிந்த கேமராக்கள் கொள்முதல் செய்தல் மற்றும் சிறைத் துறைத் தலைமை அலுவலக சர்வர் நிறுவதற்காக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
- சிறைத் துறைத் தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் சுவர் வீடியோ வசதி ஏற்படுத்த 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
- நன்னடத்தை அலுவலர்களுக்கு 38 இருசக்கர வாகனங்கள் கொள்முதல் செய்ய 45.60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
- கடலூர், திருச்சி, வேலூர்,கோவை, சேலம் ஆகிய மத்தியச் சிறைகளில் உள்ள 374.43 ஏக்கர் காலி இடத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்கு டிராக்டர்கள் கொள்முதல் செய்ய 43.23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
- காவல் துறைத் தலைமை இயக்குநர், சிறைத் துறை துணைத் தலைவர், சிறைக் கண்காணிப்பாளருக்கு மருந்துகள் கொள்முதல் செய்வதற்கான தற்போதுள்ள நிதி அதிகார வரம்பினை 26.40 லட்சம் ரூபாயாக உயர்த்தல்
- புழல் மத்தியச் சிறை வளாகத்தில் 25 லட்சம் ரூபாய் செலவில் வானொலி நிலையம் அமைக்கப்படும்
- சிறைவாசிகளுக்கான உணவு முறையினை மேம்படுத்துவதற்கான குழு அமைக்கப்படும்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை நடைபெற்றால் தான் மக்களின் அச்சம் போக்க முடியும் -முதலமைச்சர்!