ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் எத்தனை பேர்? - அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னது இதுதான்!

author img

By

Published : Apr 6, 2023, 9:26 PM IST

தமிழ்நாட்டில் இன்று ( ஏப்.06 ) நடைபெற்ற தேர்வினை எத்தனை மாணவர்கள் எழுதவில்லை என்ற விவரம் இன்னும் வரவில்லை; அது வந்தவுடன் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று ( ஏப். 06) முதல் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 4 லட்சத்து 74 ஆயிரத்து 543 மாணவர்கள், 4 லட்சத்து 63 ஆயிரத்து 522 மாணவிகள், இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 பேர் எழுத பதிவு செய்துள்ளனர்.

அதன்படி தமிழ்நாட்டில் இன்று ( ஏப்.06 ) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆப்சென்ட் ஆன மாணவர்கள் குறைவாகவே இருக்கும் என நம்புவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத்தேர்வினை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகளும் என ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் எழுதி உள்ளனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை காலையில் சென்னை லேடி வில்லிங்டன் பள்ளியில் நேரில் சென்று ஆய்வு செய்தேன். அந்தப் பள்ளியில் படித்த 56 மாணவர்களில் ஒரு மாணவர் வரவில்லை. 55 மாணவர்கள் தேர்வினை எழுதினர். மேலும் பொதுத்தேர்வினை பள்ளியில் படித்த அனைத்து மாணவர்களும் எழுத வேண்டும் என்பதற்காக ஏற்கனவே பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருக்கும் என நம்புகிறோம். மேலும், பொதுத் தேர்விற்கான தேர்வு தேதி அறிவிக்கும்போது தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு மையங்களில் விவரத்தினை அறிவித்தோம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை சுமார் 4 ஆயிரம் தேர்வு மையங்களில் மாணவர்கள் எழுதுகின்றனர். இன்று ( ஏப்.06 ) நடைபெற்ற தேர்வினை எவ்வளவு மாணவர்கள் எழுதவில்லை என்ற விபரம் இன்னும் வரவில்லை; அது வந்தவுடன் அறிவிக்கப்படும். மேலும், தேர்வுக்கு வராத மாணவர்களை துணைத் தேர்வு எழுத வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் ஏற்கனவே தேர்வு எழுத வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வரும் 24ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. பெற்றோர்களுக்கு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய அவசியத்தை புரிய வைத்து, தேர்வு எழுத வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அது என்னப்பா நுங்கு வண்டி பந்தயம்..? மதுரை அருகே மாஸ் காட்டிய குழந்தைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.