சென்னை: 2020-2021ஆம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்த பள்ளி மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இன்று (ஜூலை 19) காலை 11 மணி அளவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
- +2 தேர்ச்சி விகிதத்தை 100 விழுக்காடு என எடுத்துக்கொள்ளலாம்.
- +2 தேர்வில் 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- தேர்ச்சி பெற்றதில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 500 பேர் மாணவர்கள்; 4 லட்சத்து 35 ஆயிரத்து 973 பேர் மாணவிகள்
- 551 முதல் 600 வரை மதிப்பெண் பெர்றவர்கள் எண்ணிக்கை 39 ஆயிரத்து 679
- 501 முதல் 550 வரை மதிப்பெண் பெர்றவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 67 ஆயிரத்து 133
- 451 முதல் 500 வரை மதிப்பெண் பெர்றவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 522
- 401 முதல் 450 வரை மதிப்பெண் பெர்றவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 15
- 351 முதல் 400 வரை மதிப்பெண் பெர்றவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரத்து 579
- கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
- ஒரே மதிப்பெண் பலருக்கு கிடைப்பதால் ஏற்படும் போட்டியை தவிர்க்க முதல் முறையாக தசம மதிப்பில் +2 மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.
- மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாத மானவர்கள் தேர்வை எழுதுவதை தவிர வேறு வாய்ப்பு இல்லை.
- தேர்வு எழுத விரும்புவேருக்கு அதற்குரிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- +2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஜூலை 22 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- தனித்தேர்வர்களுக்கு கரோனா சூழலை பொறுத்து செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடைபெறலாம்.
- 10 ம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரை , தேர்வு முடிவுகளை ஆல் பாஸ் என்றே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
இதையும் படிங்க: கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரம் பேர் பாதிப்பு!