ETV Bharat / state

78,706 பேர் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. "அஞ்ச வேண்டாம் துணைத் தேர்வு இருக்கு"

தோல்வி அடைந்த மாணவர்களை துணைத் தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தோல்வி அடைந்த மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

author img

By

Published : May 19, 2023, 2:41 PM IST

Updated : May 19, 2023, 2:50 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு வெளியானது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ போன்ற தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்வது கண்காணிக்கப்படும். மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் அழுத்தம் தரக் கூடாது என்றார்.

80 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் என்னை சந்தித்தார். கால அட்டவணைப்படி இல்லாமல், வேகமாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பணியிடத்திற்கான பட்டியலை வருகிற திங்கள்கிழமை முதலமைச்சரிடம் அளிப்போம்.

அவர் தேர்வு செய்பவரை பணியில் அமர்த்துவோம். கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களை பெற்றோர்கள் ஊக்கப்படுத்திட வேண்டும். மேலும், தோல்வி அடைந்த மாணவர்களை துணைத் தேர்வு எழுத வைக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த ஆண்டு முதல்முறையாக அரசுப் பள்ளிகளில் இருந்து பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ சேரக் கூடிய மாணவர்களை கண்டறிய அவர்களுடைய பள்ளித் தகவல் மேலாண்மை எண் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பணியிடம் குறித்து வரும் திங்கள்கிழமை விவாதித்து, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார். முன்னதாக, 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்கள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் தேர்ச்சி சதவீதம் 91.39 சதவீதமாக உள்ளது. அதேநேரம், 78 ஆயிரத்து 706 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களுக்கான துணைத் தேர்வு வருகிற ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 4 வரை நடைபெற உள்ளது. இதற்கு வரும் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும் தட்கல் திட்டத்தில் 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க: TN SSLC Result: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; வழக்கம்போல் மாணவியர் தேர்ச்சி அதிகம்!

Last Updated : May 19, 2023, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.