தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் கரோனா தடுப்பு பணிக்குச் செல்ல உள்ளனர். இதன் காரணமாக, மினி கிளினிக் மூடப்படும் என, பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2,000 மினி கிளினிக்குகள் உள்ளன. இந்த மினி கிளினிக்குகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட இணை சுகாதார இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதுகுறித்து பொது சுகாதார இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது, "எங்களது நோக்கம் மருத்துவர்களை மாற்ற வேண்டும் என்பது அல்ல. கரோனா தொற்று அதிகமாவதால் வேறு வழியின்றி மாற்ற உள்ளோம். குறிப்பிட்ட பகுதியில் மினி கிளினிக்குகள் இயங்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவல் - தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்