தமிழ்நாட்டில் நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அகரம் பவுண்டேஷன் நிறுவனரும், நடிகருமான சூர்யா சில கருத்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி திண்டுக்கல் பகுதியில் பேசிய இந்து மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான தர்மா என்பவர் நடிகர் சூர்யாவை செருப்பால் அடிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றிருந்தார். வன்முறையை தூண்டும் வகையில் அவரது பேச்சு அமைந்திருப்பதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய பல மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வரும் நடிகர் சூர்யாவை இழிவுப்படுத்தி பேசிய இந்து மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தர்மா மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லயன் டேட்ஸ் பேரிச்சம்பழத்தில் எலியின் கழிவுகள் - பாதிக்கப்பட்டவர் அளிக்கும் அதிர்ச்சிகரத் தகவல்!