ETV Bharat / state

'அரவயிறு கஞ்சினாலும் நிம்மதியா குடிக்கலாம்; எங்கள ஊருக்கே அனுப்பிடுங்க' - புலம்பெயர் தொழிலாளர்களின் அவலக்குரல் - புலம்பெயர் தொழிலாளர்கள்

குடும்பத்தைக் காப்பாற்ற தொலைதூரம் சென்ற தன் மகள் பிணமாக திரும்பி வருவாள் என எதிர்பார்க்கவில்லை என்று கண்ணீரோடு அவரது தந்தை புலம்பியது அனைவரையும் நிலைகுலையச் செய்தது.

migrant-workers-voice-for-going-back-to-home

author img

By

Published : May 7, 2020, 11:13 AM IST

தாங்கள் எதற்காக தங்களது சொந்த மாநிலத்தை விட்டு வெளியேறினார்களோ, தற்போது அதையே இழந்து நிற்கதியாய் நிற்கிறார்கள் நாடு முழுவதுமுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்வாதாரத்துக்காக குடும்பத்தை பிரிந்து, நெடுந்தூரம் பயணித்து, உழைத்து ஓடாய் தேய்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள், இன்று ஒருவேளை சோற்றுக்காக சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று கண்ணீரோடு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நாடு முழுவதும் மத்திய அரசாங்கம் ஊரடங்கை அறிவித்து, போக்குவரத்தை முடக்கியது அவர்களை நகரவிடாமல் செய்தது. கரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 40 நாள்களுக்கும் மேல் நீடிக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தியாவில் 80 விழுக்காடு தொழில்கள் அமைப்புசாரா தொழில் துறையிலையே அடங்கியிருப்பதாகவும், அதிலும் அதிகளவிலான புலம்பெயர் தொழிலாளர்களே இதில் வேலை செய்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கால் இவை அனைத்தும் முடக்கப்பட்டு, புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை மேலும் மோசமடைந்தது.

ஏப்ரல் 14ஆம் தேதி வரை தங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிய சில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு நடைப்பயணமாகச் சென்று உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் பல அரங்கேறியுள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த வாரம் பெங்களூருவில் கட்டுமானத் தொழில் செய்துவந்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நடந்தே சொந்த ஊருக்குச் சென்றார். சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றதால், ஊர் சேரும் முன்பே அவரின் உயிர் பிரிந்தது.

இதில் கொடுமை என்னவென்றால், அவருக்கு கரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் குடும்பத்தினர் கூட அவரின் உடலை சீண்டவில்லை. விஷயமறிந்து உள்ளூர் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் உடலை மீட்டு, அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்தனர். அதன்பின்னரே அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல, தெலங்கானாவில் மிளகாய் பறிக்கும் வேலை செய்து வந்த சட்டீஸ்கரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், கால்நடையாக சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். அவர் ஊர் சேர்வதற்கு 2 கிமீ தூரமே இருந்த நிலையில், சுருண்டு விழுந்து இறந்தார். குடும்பத்தைக் காப்பாற்ற தொலைதூரம் சென்ற தன் மகள் பிணமாக திரும்பி வருவாள் என எதிர்பார்க்கவில்லை என்று கண்ணீரோடு அவரது தந்தை புலம்பியது அனைவரையும் நிலைகுலையச் செய்தது.

இதுபோன்று நிறைய சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்க, வெளிச்சத்திற்கு வருவது சொற்பமே என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ஒவ்வொரு கட்ட ஊரடங்கு முடியும் போதும், சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்திருந்த தொழிலாளர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. பல உயிர்கள் மாய்ந்த பின், கடைசியாக மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிப்பின்போதுதான், தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதுவும், உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் மூலமாகத்தான் அரசு இது சாத்தியமானது. ஆனால் மத்திய அரசாங்கம் மனசாட்சியற்று அவர்களிடம் ரயில் கட்டணத்தை வசூலித்தது. அடுத்த வேளை சோற்றுக்கே அல்லல்படும் இவர்களிடம், ரயில் கட்டணம் வசூலிப்பது முட்டாள்தனம் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியே விமர்சனம் செய்தார். நாட்டில் மொத்தம் 5 கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிற நிலையில், அவர்களின் நிலையைக் கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் போனது அதன் கையாலாகாத்தனத்தைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தமிழ்நாட்டிலும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் சென்னை, ஈரோடு, கோவை போன்ற மாநகரங்களில்தான் இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பிற மாவட்டங்களில் ஆங்காங்கே சிறு சிறு கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்திவந்த இவர்களின் மொத்த வாழ்வாதாரத்தையும் பிடுங்கி எறிந்துள்ளது இந்த சூழல்.

சில தினங்களுக்கு முன் கிண்டியில் உள்ள லாட்ஜில் தங்கவைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் தண்டையார்பேட்டை வழியாக நடைபயணமாக விஜயவாடாவை நோக்கி நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

”நாங்கள் இங்கு இருந்து கரோனாவால் இறக்கலாம் அல்லது உயிரோடு இருக்கலாம், ஆனால் பசியோடு இறக்க தயாராக இல்லை. அப்படி நாங்கள் இறக்கக் கூடாது என்றால் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும். அதற்கு வழி செய்து கொடுங்கள்” என்று கூறுகின்றனர்.

இன்னும் சிலர், ”இங்கே யாரையும் எங்களுக்குத் தெரியாது. ஒரு வேளைதான் சோறு கிடைக்கிறது. ஊரடங்கால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதால், கடன் கூட யாரிடமும் கேட்க முடியவில்லை. சொந்த ஊரில் காசு இல்லாமல் கூட வாழ்ந்துவிடுவோம். ஆனால் எங்களால் இங்கு பசியால் வாட முடியாது” என்கிறார்கள் வருத்தத்தோடு.

சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானதிலிருந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்களும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இதற்கு மேலும் தங்களால் இந்த சூழலை சமாளிக்க முடியாது எனக் கூறும் அவர்கள், எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று கையெடுத்து கும்பிடுகின்றனர். அவர்களின் விவரங்களைச் சேகரித்து ஏற்பாடு செய்வதாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உறுதியளித்துள்ளன.

நேற்று உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஊரடங்கில் சில தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், விருப்பப்படும் தொழிலாளர்கள் இங்கேயே தங்கி வேலை செய்யலாம் என்றும், அவ்வாறு விருப்பம் இல்லாதவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடலாம் என்றும் கூறியிருந்தார். இருப்பினும், அரவயிறு கஞ்சினாலும் சொந்த ஊரில் நிம்மதியா குடிக்கலாம் என்ற ஒற்றை நோக்கத்துடன் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதால், அனைவரும் கிளம்பி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இத்தகைய பேரிடர் காலத்தில், தொலைதூரத்தில் குடும்பங்களை விட்டு தவித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை, தகுந்த பாதுகாப்போடு அவர்களின் சொந்த ஊருக்கே அனுப்புவதுதான் சிறந்த நடவடிக்கையாக இருக்கும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.