ETV Bharat / state

சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- உயர் நீதிமன்றம் - பேனர் வைக்கும் விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், விதிகளை பின்பற்றாமல் எந்தப் பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது எனத் தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேனர்
பேனர்
author img

By

Published : Nov 30, 2021, 6:42 PM IST

சென்னை: விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ஆகஸ்ட் மாதம் நடந்த இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரியும், உயிரிழந்த சிறுவனின் குடுமத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்க கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக திமுக, தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (நவ.30) விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உயர்நீதிமன்றம் பேனர்கள் வைக்க கூடாது என உத்தரவிட்டுள்ளதால், பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என திமுக தலைவர் அறிவித்ததாகவும், அவர் முதலமைச்சராக பதவியேற்ற போது கூட பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும், விழுப்புரம் சம்பவத்தை பொறுத்தவரை சிறுவனை பணிக்கு அமர்த்தியது காண்ட்ராக்டர் தான் எனவும், அவர் தரப்பில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காண்ட்ராக்டர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் ஜாமீனில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேனர்கள் வைப்பதை முறைப்படுத்த சட்டம் உள்ளதாகவும், அதன்படி விதிமீறி செயல்படுபவர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொள்ள மாட்டார் என கூறுவது மட்டும் போதாது, கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது ஆளுங்கட்சிக்கு மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்து சொல்வதாகவும் தெரிவித்தனர்.

மேலும், அனுமதி பெறாமல் பேனர் வைப்பவர்கள் மீது யாரிடம் புகார் அளிக்க வேண்டும், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர். அரசியல்வாதிகள் மட்டுமல்ல மற்றவர்களும் விதிகளை மீறி பேனர் வைக்கின்றனர். விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கடும் பணிச்சுமை: மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரிக்கை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.