ETV Bharat / state

Elephant Corridor: யானை வழித்தடத்தில் உள்ள மூங்கில் மரத்தை அகற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு...

author img

By

Published : Aug 17, 2023, 6:13 PM IST

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 19 லட்சம் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்த குருசந்த் வைத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "மசினகுடியில் எனக்கு சொந்தமான நிலத்தில் காய்ந்துபோன மூங்கில் மரங்கள் உள்ளது அவை அனைத்தும் எனது தாத்தா காலத்தில் வைக்கப்பட்டதாகும். மேலும், வளர்ந்து காய்ந்துபோன மூங்கில் மரங்களை வெட்டாததால், அந்த நிலத்தில் மற்ற விவசாயம் செய்ய முடியவில்லை. அதுமட்டும் இல்லாமல், மூங்கில் மரங்களை அகற்றவில்லலை என்றால் வனப்பகுதியில் காட்டு தீ எற்படவும் அதிக வாய்ப்புள்ளது.

ஆகவே, தற்போது அந்த மரங்களை தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெட்ட அனுமதிக்க வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. எனவே, காய்ந்து போன நிலையில் உள்ள மூங்கில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி.அருண், அந்த நிலத்தை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்த பகுதி யானைகள் வழிதடமாக உள்ளதாக தெரிவித்தார். மொத்தமாக இருக்கக்கூடிய 61.85 ஏக்கர் பரப்பளவில், 20 ஆயிரத்து 309 மூங்கில் கொத்துகள் உள்ளதாகவும், ஒவ்வொரு கொத்திலும் 50 முதல் 80 வரை மூங்கில் மரங்கள் உள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக 19லட்சம் மூங்கில் மரங்கள் அந்த பகுதியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே யானைகள் வழித்தடத்தில் அமைந்திருக்க கூடிய விடுதிகள், நிலங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிகாட்டினார். மூங்கில் மரங்களை யானைகள் உணவாக பயன்படுத்தி வருவதாகவும், அதனை வெட்டி அப்புறப்படுத்தினால் யானைகள் ஊருக்குள் நுழைந்து மனித - விலங்குகள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, சம்மந்தப்பட்ட இடம் யானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள யானைகள் வழித்தடம் தொடர்பான குழுவிடம் சென்று, மனுதாரர் தனது இடம் யானைகள் வழித்தடத்தில் வரவில்லை என்பதை முறையிடலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும், வனத்துறை சம்மந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து யானைகள் வழித்தடத்தில் உள்ள இடங்களை கையகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் நிலம் அமைந்துள்ள பகுதி யானைகள் வழித்தட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மரம் ஏறி அட்டகாசம்... வாகன ஓட்டியை மிதிப்பேன் என மிரட்டும் யானையின் வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.