ETV Bharat / state

PETA, WVS, IPAN உரிமங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கு; மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனுத் தாக்கல்! - தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா

Madras High Court: சட்ட விதிகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிரான புகார் குறித்து விசாரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

PETA,WVS,IPAN உரிமங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 10:51 PM IST

சென்னை: பீட்டா (PETA - People for the Ethical Treatment of Animals ), டபிள்யு.வி.எஸ்.(WVS - Worldwide Veterinary Service), ஐ.பி.ஏ.என் (IPAN - India Project for Animals and Nature) ஆகிய விலங்குகள் அமைப்புகளுக்கு அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதாகவும், கால்நடை ஆராய்ச்சி சம்பந்தமாக நிறுவனங்கள் நடத்தி வருவதாகவும், அதற்கு அரசிடம் உரிய அனுமதியைப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (செப்.26) தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலாளர் முத்துக்குமார் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதையும், பயன்படுத்துவதையும் கண்காணிக்கும் நடைமுறைகள் அமைப்புகளில் உள்ளதாகவும், சட்ட விதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால், உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பீட்டா உள்ளிட்ட மூன்று அமைப்புகளுக்கு எதிராக மனுதாரர் அளித்த புகாரை, மத்திய பாதுகாப்பு முகமைகளின் ஆலோசனைகளைப் பெற்று, விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: Sweet Corn Health Benefits: இதய நோயை தடுக்கும் ஸ்வீட் கார்ன்..! இவ்ளோ நன்மைகளா?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.