ETV Bharat / state

டாஸ்மாக்கில் விட்டுச்சென்ற காலி பாட்டில் யாருக்கு..? காலி பாட்டில்களை வாங்கும் ஒப்பந்தரார்கள் தாக்கல் செய்த வழக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 7:55 PM IST

Madras High Court: டாஸ்மாக்கில் காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்வதற்கான தமிழ்நாடு அரசின் ஒப்பந்தத்தை எதிர்த்துத் தொடரப்பட்டு வழக்கில், மதுபான கடைகளில் திரும்பப்பெறப்படும் பாட்டில்கள் மனுதாரர்களுக்குத் தான் கிடைக்கும் என்பதால், அரசின் டெண்டர் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc orders that new tenders from TN government on liquor bottles return on tasmac will be valid
காலி மதுபாட்டில்களை திரும்பக் கொடுக்கும்போது இனி பாரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: வனப்பாதுகாப்பு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், காலி மது பாட்டில்களை விவசாய நிலம், நீர் நிலைகள், குப்பைத் தொட்டிகள், திறந்தவெளி நிலம், பாசன கால்வாய்களில் வீசப்படுவதைத் தடுக்கும் வகையில், மதுபானத்தைப் பாட்டிலுக்கு 10 ரூபாய்க்கு கூடுதலாக விற்றுவிட்டு, காலி பாட்டிலைத் திருப்பி கொடுத்தால் அந்த தொகையைத் திருப்பி கொடுக்கலாம் என முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, நீலகிரி, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் இந்தத் திட்டம் முன்னோடி திட்டமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பிப் பெறப்படும் பாட்டில்களைக் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்த காலம் வருகின்ற 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை ஒட்டிய பார்களுக்கான டெண்டர் கோரப்பட்டதில், காலி பாட்டில் சேகரிப்பு மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்வதற்கான "ஒப்பந்தம்" எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததால், அந்த டெண்டரை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.

டாஸ்மாக் கடைகளால் திரும்பப் பெறப்பட்ட காலி மதுபாட்டில்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள் நீதிபதிகள் N.சதீஷ்குமார், D.பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று (டிச.14) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர்கள் அருண் அன்புமணி, ஆர்.சந்திரசேகரன் ஆகியோரும், அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கே.சதீஷ்குமார் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில், “காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக டெண்டர் அமைந்துள்ளது. மதுபான கடைகளில் இருந்து பாட்டில்களை வாங்க தங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பார் இல்லாத இடங்களிலும் புதிய டெண்டர் கோரப்பட்டதால் எங்கள் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இது எங்களின் நியாயமான எதிர்பார்ப்பு" என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து அரசு தரப்பில், “மதுபான கடைகளில் திரும்பப்பெறப்பட்ட பாட்டில்களைக் கொள்முதல் செய்யவே மனுதாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பார்களில் விட்டுச்செல்லப்பட்ட பாட்டில்களுக்கு உரிமை கோர முடியாது. இதில் மனுதாரர்களின் உரிமை பாதிக்கப்படவில்லை" என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “பார்களுக்கான புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டாலும், மதுபான கடைகளில் திரும்பப்பெறப்படும் பாட்டில்கள் மனுதாரர்களுக்குத் தான் கிடைக்கும் என்பதால், அரசின் டெண்டர் செல்லும். டெண்டர் நடைமுறைகளை அரசு தொடரலாம். அதேசமயம், இதை நியாயமான எதிர்பார்ப்பு என மனுதாரர் கேட்கமுடியாது. எதிர்காலத்தில் தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்தால், மனுதாரர்கள் நியாயமான எதிர்பார்ப்பு என உரிமை கோர முடியாது” எனக் கருத்து தெரிவித்தனர்.

மேலும், “குடி என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும். அதன் மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என மனுதாரர்கள், பார் ஒப்பந்ததாரர்கள், டாஸ்மாக் நிர்வாகம் என யாரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்க முடியாது. பார்களில் சேகரிக்கப்படும் காலி மதுபாட்டில்களை திரும்பக் கொடுக்கும்போது, அதற்கான பத்து ரூபாய் தற்போது ரொக்கமாகக் கொடுப்பதை இனி சம்பந்தப்பட்ட பாரின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்” எனச் சுட்டிக்காட்டி அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரிய வழக்கு... டிச.19-க்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.