ETV Bharat / state

வன பயிற்சியாளர் பணிக்கு, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான ஒதுக்கீடு வழங்க கோரிய மனு தள்ளுபடி...! - வன பயிற்சியாளர் பணி

வன பயிற்சியாளர் பணிக்கு, தமிழ் வழியில் பொதுப் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு வழங்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC order, State board students can't get reservation in Forest ranger recruitment

author img

By

Published : Sep 26, 2020, 10:18 PM IST

சென்னை: வன பயிற்சியாளர் பணிக்கு, தமிழ் வழியில் பொதுப் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு வழங்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில், 158 வனப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், வனவியலில் பட்டப்படிப்பு அல்லது இயற்பியல், தாவரவியல் உள்ளிட்ட 15 படிப்புகளில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த மற்ற பாடங்களில் பட்டப் படிப்பு முடித்தவர்கள், தாங்கள் தமிழ் வழியில் படித்திருப்பதால், 20 சதவீத ஒதுக்கீட்டின்படி தங்களை நியமிக்கக் கோரி, ஜீவனா உள்ளிட்ட ஒன்பது பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வனவியலில் பி.எஸ்.சி., பட்டத்தை, தமிழில் படித்தவர்கள் யாரும் இல்லை. மேலும், இதர பட்டங்கள் பெற்றவர்களை பரிசீலிக்கும் போது தான், தமிழ் வழி படித்தவர்களுக்கான ஒதுக்கீடு பொருந்தும் என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து ஜீவனா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, வன பயிற்சியாளர் பணியிடங்களுக்கு வனவியலில் பட்டம் பெற்றவர்களை நியமிக்க வேண்டும் இல்லாவிட்டால் மட்டுமே மற்ற பாடங்களில் பட்டம் பெற்றவர்களை பரிசீலிக்க வேண்டும் என, வனத்துறை பணி விதிகளில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.

மேலும், வனவியல் படித்தவர்களை நியமித்த பின் தான், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை விதியை அமல்படுத்த முடியும் எனக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...ஜி.எஸ்.டி. இழப்பீட்டைப் பெற முன்வருவரா முதலமைச்சர்? - மு.க. ஸ்டாலின் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.