ETV Bharat / state

கரோனா தொற்று காலத்தில் கிருமிநாசினி தெளிப்பதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு.. உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..

கரோனா தொற்று காலத்தில் தாம்பரம் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிப்பதில்பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 11, 2023, 3:13 PM IST

சென்னை: கரோனா தொற்று காலத்தில் தாம்பரம் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிப்பதில் நடந்த பல லட்சம் ரூபாய் முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு இன்று (பிப்.11) தொடரப்பட்டுள்ளது. சென்னை, கவுரிவாக்கத்தைச் சேர்ந்த மக்கள் பசுமை இயக்க நிறுவனத் தலைவர் நாஞ்சில் சி.மனோகரன் தாக்கல் செய்த மனுவில், 'கரோனா தொற்று பரவல் காலத்தில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற சுகாதார பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் 2019-20, 2020-21ம் ஆண்டுகளில் கிருமிநாசினி தெளிக்க எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது? எந்தெந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது? என விவரம் கேட்டு மூன்று முறை தகவல் உரிமை சட்டத்தில் (Right to Information) விண்ணப்பித்ததாகவும், அதன்படி வழங்கிய தகவலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

கிருமிநாசினி தெளிக்கும் பணிக்கு எந்த ஒப்பந்தமும் வழங்காமல், அரசு நிதி சுரண்டப்பட்டுள்ளதால், இதுசம்பந்தமாக சுதந்திரமான விசாரணை குழுவை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.

இதையும் படிங்க: சினிமா பாணியில் நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம்; தம்பிக்காக ஆஜரான அண்ணன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.