ETV Bharat / state

“ஒரு லட்சம் பேர் அரசு முத்திரைகளை விதிகளை மீறி பயன்படுத்தி உள்ளனர்” - தமிழ்நாடு அரசு தகவல்!

Madras High Court: தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரைகள் மற்றும் பெயர்களை பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

madras highcourt
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 3:28 PM IST

சென்னை: தமிழகத்தில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களில் குறிப்பிடப்படும் 'G' என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், 'இந்திய அரசு', 'தமிழ்நாடு அரசு', 'உயர் நீதிமன்றம்', 'காவல் துறை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அரசு சின்னங்களை ஒட்டிக் கொண்டு சிலர் விதி மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி, தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் R.முனியப்பராஜ் ஆஜராகி,
இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதன்படி, விதிமீறல்களில் ஈடுபட்ட 1 லட்சத்து 4 ஆயிரத்து 17 தனியார் வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், 16 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகள், பெயர்கள், சின்னங்களை பயன்படுத்துவோர் மீதான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனவும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அரசு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால், இந்த நடவடிக்கைகளை தொடரும்படி அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இணைத்து பேச தனபாலுக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.