ETV Bharat / state

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பழங்குடி மக்களுக்கு ஒதுக்கீடு இல்லை- பகுஜன் சமாஜ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
author img

By

Published : Jan 27, 2022, 6:03 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலின, பழங்குடியினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஜனவரி 17ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் சத்தியமூர்த்தி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், "மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் மூன்று மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, பழங்குடியினத்தவர்களுக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை.

இதேபோல, 138 நகராட்சிகளில் 20 நகராட்சி தலைவர் பதவிகள் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன, பழங்குடியினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 490 பேரூராட்சிகளில் 85 பேரூராட்சிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 3 இடங்கள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தச் சட்டத்தின் படியும் அல்லாமல், விதிகளின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணையை வெளியிட உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று(ஜன.27) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞரும், சென்னை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞரும், 1994ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 1994ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.