ETV Bharat / state

விளையாட்டு வீரரின் நிலமோசடி வழக்கு: தொடர் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி! - உயர் நீதிமன்றம் அனுமதி

சர்வதேச தடகள விளையாட்டு வீரர் அளித்த நிலமோசடி புகார் மீதான புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள பள்ளிக்கரணை காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

MHC
MHC
author img

By

Published : Jun 11, 2021, 6:10 PM IST

சென்னை: காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்த டென்பின் பவுலிங் விளையாட்டு வீரர் ஷேக் அப்துல் ஹமீது. டில்லியைச் சேர்ந்த இவர், சென்னை கோவிலம்பாக்கத்தில் 4.12 ஏக்கர் நிலத்தை வாங்க பாலாஜி, மீனா ஆகியோருடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

நிலத்துக்காக, 23 கோடி ரூபாயை பெற்று தன்னை மோசடி செய்து விட்டதாக, டென்பின் பவுலிங் விளையாட்டு வீரர் ஷேக் அப்துல் ஹமீது சென்னை பள்ளிக்கரணை காவல்துறையில் புகார் அளித்தார். இதன் பேரில் பாலாஜி, மீனா உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை பள்ளிக்கரணை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பாலாஜி, மீனா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என, ஷேக் அப்துல் ஹமீது சார்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை ரத்து செய்யக் கோரியவர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதி, வழக்கு விசாரணை வரும் ஜூன் 18ஆம் தேதி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும், பள்ளிக்கரணை காவல்துறையினர் புலன் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் எனவும், அவர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'நிரந்தரமாக மதுக்கடைகளை மூடுங்கள்' எல்.முருகன் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.