ETV Bharat / state

பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் பணியிடை நீக்க உத்தரவு ரத்து!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras highcourt
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jul 29, 2023, 12:27 PM IST

Updated : Jul 29, 2023, 2:22 PM IST

சென்னை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பேராசிரியராக உள்ள A.மணிமேகலன் மீது உதவி பேராசிரியர்களாக இருக்கக்கூடிய இரு பெண்கள் கடந்த ஜனவரி 25ஆம் தேதி பாலியல் புகார் அளித்தனர்.

இந்த புகாரை பல்கலைக்கழக உள் புகார் குழு விசாரித்தது. இந்த ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், மணிமேகலனை பணியிடை நீக்கம் செய்து ஜனவரி 30ஆம் தேதி பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மணிமேகலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பாலியல் புகாரை விசாரிக்கும் உள் புகார் குழுவின் தலைவராக பணிபுரியும் இடத்தில் உள்ள மூத்தவர்களை நியமிக்க வேண்டும் என சட்டம் உள்ள நிலையில், தமக்கு எதிரான புகாரை விசாரிக்க மிக இளைய பேராசிரியரை நியமித்தது தவறு என வாதிடப்பட்டது. மேலும், தமக்கு எதிரான புகார் குறித்த விசாரணை அறிக்கையில் குழுவில் இருந்தவர்களில் ஒருவர் கையெழுத்திடவில்லை எனவும் வாதிடப்பட்டது.

மேலும் பல்கலைக்கழகம் மற்றும் உள் புகார் குழு தரப்பில், இது போன்ற தீவிரமான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் உள் புகார் குழுவின் தலைவராக யார் நியமிக்கப்படுகிறார் என்பதை பார்க்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி சதீஷ்குமார், முழுமையாக விசாரணை நடத்தி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பணியிடை நீக்கம் செய்ய முடியும் எனவும், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை வைத்து பணியிடை நீக்கம் செய்தது தவறு எனக்கூறி, பணியிடை நீக்கம் செய்த நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேபோல, பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூத்த பெண் பேராசிரியர்கள் பலர் இருக்கக் கூடிய நிலையில், இளையோரை கொண்ட உள் புகார் குழு அமைத்தது தவறு என சுட்டிக் காட்டியுள்ள நீதிபதி, சட்டப்படி குழு அமைத்து விசாரணை நடத்தும்படியும், அதன் பின்னர் பல்கலைக்கழகத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பணியிடை நீக்கத்தில் இருந்த காலத்திற்கான ஊதியத்தை பெற முடியும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கிண்டியில் சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்பு கண்டுபிடிப்பு!

Last Updated : Jul 29, 2023, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.